தற்போதைய செய்திகள்

தடுப்பூசி 2-ம் டோஸ் போடுபவர்களுக்கே முன்னுரிமை: மத்திய அரசு

ANI

கரோனா தடுப்பூசியில் இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில அரசுகளிடம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்ப்பாடு எழுந்துள்ளது. முதல் டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு தெரிவித்தது,

அனைத்து மாநிலங்களும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளுக்காக அதிகமானோர் காத்திருப்பதால் அவர்களுக்கு தீர்வு காண அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 சதவீதத்தை இரண்டாம் டோஸ் பயனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 30 சதவீதத்தை முதல் டோஸ் செலுத்த வருபவர்களுக்கு போட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT