தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ANI

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 15 நாள்கள் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நீட்டித்து அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி காலை 7 மணிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சரக்கு லாரிகளில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்கள் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மே 15ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT