தில்லியில் தொடர்ந்து குறையும் கரோனா: இன்று 6,430 பேர் மட்டுமே பாதிப்பு
தில்லியில் புதிதாக 6,430 பேருக்கு இன்று(சனிக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 6,430 பேருக்கு இன்று(சனிக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 6,430 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 13,87,411ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 337 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 21,244 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 11,592 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 12,99,872 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நோய் பாதித்த 66,295 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.