தற்போதைய செய்திகள்

டவ்-தே புயல்: கன்னியாகுமரிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகியுள்ள நிலையில் கேரள-தமிழக பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் ஏற்படும் சூழல் நிலவுவதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT