மம்தா பானர்ஜி 
தற்போதைய செய்திகள்

மீண்டும் பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா

மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி வரை மம்தா முன்னிலை பெற்று வந்த நிலையில், கடைசி சுற்று எண்ணிக்கையில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, மம்தா பானா்ஜியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுத்தனா். அதனடிப்படையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது.

2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் மம்தா போட்டியிட்டு வென்ற பவானிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோவந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை இன்று  ராஜிநாமா செய்துள்ளார்.

இதையடுத்து, பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

கோவையில் வனத் துறையினரின் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

நொய்டா வரதட்சிணை கொலை: சொகுசு கார், பைக், தங்கம், பணம்.. நீளும் பட்டியல்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT