தற்போதைய செய்திகள்

கரோனா 3-ம் அலைக்கு தயாராகும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைகள்

கரோனா மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

ANI

கரோனா மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால், நாள்தோறும் லட்சக் கணக்கான மக்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர்.

இதனிடையே கரோனா மூன்றாம் அலை விரைவில் வரும் எனவும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் அறிவுறுத்திவுள்ளனர்.

மேலும், கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சதர் மருத்துவமனையில், குழந்தைகளுக்கென பிரத்யேக கோவிட் வார்டுகளை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வார்டில் உள்ள அறைகளின் சுவற்றில் விலங்குகள் உள்ளிட்டவை வரைந்தும், வார்டுகளுக்கு வெளியே குழந்தைகள் விளையாட பொருள்களும் வைத்துள்ளனர். 

அதேபோல் மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஒரு தன்னார்வலர் அமைப்பு, குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா மையத்தை உருவாக்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT