சீர்காழியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14, 340, பெண் வாக்காளர்கள் 15 ,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர்.
தற்போதைய செய்திகள்சீர்காழியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14, 340, பெண் வாக்காளர்கள் 15 ,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர்.
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14, 340, பெண் வாக்காளர்கள் 15 ,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகள் 36 அமைக்கப்பட்டு 19 தேதி சீர்காழி நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்தது. சீர்காழி 24 வார்டுகளில் அதிமுக, திமுக, பாமக ,தேமுதிக, காங்கிரஸ், பாஜக ,விடுதலை சிறுத்தைகள் சுயேட்சைகள் என 133 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தம் 20,001 வாக்குகள் பதிவாகின.
இங்கு 67 .54% வாக்குப்பதிவாகின. நகராட்சியில் 24 வார்டுகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. இன்று காலை வாக்குகள் என்னும் பணி தொடங்கின. முன்னதாக சீர்காழி சப்-கலெக்டர் நாராயணன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராகிம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காதர் கான், செல்லதுரை, சார்லஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்பட்டது. மொத்தம் 46 தபால் வாக்கு பதிவாகின.