சேலம் மாணவர் கார்த்திக். 
தற்போதைய செய்திகள்

உக்ரைனில் தவிக்கும் சேலம் மாணவர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன், ரேணுகா தம்பதியர்.

கு. இராசசேகரன்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன், ரேணுகா தம்பதியர். இவர்கள் விவசாயம் மற்றும் மேட்டூர் அங்காடியில் காய்கறி வியாபாரமும் செய்து வருகின்றனர். இவர்களது மகன் கார்த்திக் (26) எம்எஸ் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.  

மே மாதம் அவரது பட்டப் படிப்பு காலம் நிறைவடைகிறது. இந்நிலையில் உக்ரைனில் போர் நடந்து வருகிறது. ஜார்ஜியோ விமான நிலையத்திற்கு வருவதற்கு 30 மணி நேரம் ரயில் பயணம் செய்ய வேண்டும். போர் நடந்து வருவதால் அவரது பயணம் பதிவு ரத்து செய்யப்படுவதாக கார்த்திக் நேற்று இரவு அவரது தந்தையிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். 

தன்னை உக்ரைனில் இருந்து அழைத்துச் செல்ல இந்திய அரசின் உதவியை நாட அவரது தந்தைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து அவரது தந்தை அர்ஜூனன் தனது மகனை மீட்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேட்டூர் சார் ஆட்சியர் பீர் பிரதாப் இடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!

தேசிய விருதுகள்: சிறந்த மலையாளத் திரைப்படம் 'உள்ளொழுக்கு'

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

71-ஆவது தேசிய விருதுகள்: பார்க்கிங் - சிறந்த தமிழ் படம்!

SCROLL FOR NEXT