தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.70% வாக்குகள் பதிவு

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

இந்த 6-வது கட்டத்தில் அம்பேத்கா் நகா், பல்ராம்பூா், குஷிநகா் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.70 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, அம்பேத்கர் நகர் 52.42 சதவீதம், பாலியா 46.50 சதவீதம், பல்ராம்பூர் 42.51 சதவீதம், பஸ்தி 46.30 சதவீதம், தியோரியா 45.37 சதவீதம், கோரக்பூர் 46.46 சதவீதம், குஷிநகர் 48.595 சதவீதம், மகாராஜ்கஞ்ச் 47.595 சதவீத வாக்குகள்  பதிவாகியுள்ளது. 

இறுதிகட்டத் தேர்தல் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT