முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரி நகர்மன்ற மறைமுகத் தேர்தல்: திமுகவின் லட்சுமி மாது வெற்றி

தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்க நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவின் லட்சுமி மாது வெற்றி பெற்றார்.

தற்போதைய செய்திகள்

தருமபுரி நகர்மன்ற மறைமுகத் தேர்தல்: திமுகவின் லட்சுமி மாது வெற்றி

தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்க நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவின் லட்சுமி மாது வெற்றி பெற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தருமபுரி: தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்க நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவின் லட்சுமி மாது வெற்றி பெற்றார்.

தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த‌ 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் திமுக 18 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர். ஏனைய 13 வார்டுகளில் அதிமுகவினர் வெற்றிபெற்றனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தருமபுரி நகர்மன்றத் தலைவரை தேர்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சித்ரா சுகுமார் முன்னிலை நடைபெற்றது.

இத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சி தலைமை அறிவித்த லட்சுமி மாது வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல அதிமுக சார்பில் ராஜாத்தி ரவி என்பவர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திமுகவின் லட்சுமி மாது 20 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ராஜாத்தி ரவி 13 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.  வெற்றி பெற்ற நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாதுவுக்கு, நகராட்சி ஆணையர், அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →