முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

அவிநாசி தலைவர் தேர்தல்: 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு

அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்

அவிநாசி தலைவர் தேர்தல்: 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு

அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
கோப்புப்படம்
பகிர்:

அவிநாசி: அவிநாசி பேரூராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதையடுத்து நடைபெற்ற தலைவர் தேர்தலில் 6வது வார்டு திமுக உறுப்பினர் தனலட்சுமி, 7வது வார்டு திமுக உறுப்பினர் சசிகலா, 14 வது வார்டு அதிமுக உறுப்பினர் சித்ரா ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் ஒவ்வொருவரும் தலா 6 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தன், அடுத்த கட்டமாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவிநாசி பேரூராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வார்டு உறுப்பினர்கள் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் குமார் 15 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார் . கவுன்சிலர்(இந்திய கம்யூனிஸ்ட்)  சுப்பிரமணி 12 வாக்குகள் பெற்றார்.

அவிநாசி அருகே குன்னத்தூர் பேருராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்வில் 12-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் குமாரசாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 13-வது வார்டு உறுப்பினர் வெங்கடாசலம் 7 வாக்குகள் பெற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →