முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் தேர்வு

ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சுதா அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வி அடைந்தார். 

தற்போதைய செய்திகள்

ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் தேர்வு

ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சுதா அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வி அடைந்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

ஆலங்குளம்: ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சுதா அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வி அடைந்தார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரும், புதன்கிழமை கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தல் வெள்ளிக்கிழமை  பேரூராட்சி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. 

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக 6-வது வார்டு கவுன்சிலர் உமாதேவி கட்சித்தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 7-வது வார்டு கவுன்சிலர் சுதாவும் தலைவர் பதவிக்கு மனு செய்திருந்தார். இதனால் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், தேர்தல் அதிகாரி பொன்னுசாமி முன்னிலையில் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டதில் 8 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக தலைமை அறிவித்த உமாதேவி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றது ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →