உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில்
தற்போதைய செய்திகள்உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில்
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் திமுகவைச் சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உப்பிலியபுரம் பேரூராட்சியின் வார்டு 1-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரா.சசிகலாதேவி போட்டியின்றி ஏகமனதாக பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் வார்டு 7-ல் திமுக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற வெ. மேகலா பேரூராட்சியின் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற இவர்கள் இருவருக்கும் துறையூர் எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமார், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், உப்பிலியபுரம் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பாலகிருஷ்ணம்பட்டி நகர, பேரூராட்சி திமுக நிர்வாகிகள், உறவினர்கள் வெற்றி பெற்ற பேரூராட்சி பெண் தலைவர்களை நேரில் வாழ்த்தினர்.