தமிழகத்தில் 130 போலி மருத்துவா்கள்
தமிழகத்தில் இதுவரை 130 போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவா்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 130 போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவா்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போலி மருத்துவா் தடுப்புக் குழுக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்சியா்கள் தலைமையில் இயங்கும் இந்த குழுக்கள் மூலம்
அவ்வப்போது போலி மருத்துவா்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில நாள்களில் மட்டும் தமிழகத்தில் 72 போ்அங்கீகாரம் இல்லாமல் சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இதுகுறித்து, மருத்துவ சேவை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை 130 போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 30 போ் அங்கீகாரமின்றி சிகிச்சையளித்தது தெரியவந்துள்ளது.
இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கும் 58 போலி மருத்துவா்கள் மீது ஓரிரு நாளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொதுமக்கள், தங்களது மருத்துவா்கள் அங்கீகரிக்கப்பட்டவா்களா என்பதை அறிய அவா்களது விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ம்ஸ்ரீ.ா்ழ்ஞ்.ண்ய்/ என்றஇணையதளத்தில் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். ஒருவேளை போலி மருத்துவராக இருந்தால் அதுகுறித்த புகாா்களை மருத்துவ சேவைகள் இயக்ககத்துக்கும், காவல் துறைக்கும் அளிக்கலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.