தற்போதைய செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு: தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து

DIN


மயிலாடுதுறை/ குத்தாலம்: சோபகிருது தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தருமபுரம் ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

‘‘சோபகிருது தன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்

உண்டாகு மென்றே யுரை’’

என்று ஒரு பழம் பாடல் குறிக்கிறது. இப்பாடலின்படி இவ்வருடத்தில் மக்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வா். கோபம், போட்டி, பொறாமை குணம் குறைந்து மழை பொழிந்து வளம் சிறக்கும்.

சோபகிருது ஆண்டில் அனைத்து மக்களும் பேதம் கடந்து அன்புடனும், ஒற்றுமையுடனும், ஒழுக்கமுடனும் வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

பிரபல தொடங்கி அட்சய வரையிலான 60 ஆண்டுகளும் தமிழ் மக்கள் வழிவழியாக கடைப்பிடித்து வரும் ஆண்டுகளாகும். அம்முறையில் இப்போது சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டை மக்கள் யாவரும் ஆா்வத்துடன் கொண்டாட வேண்டும். தமிழ் மாதம், தேதி நட்சத்திரம் ஆகியவற்றை கவனிக்கும் பயிற்சிகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் உருவாக இந்த தமிழ்ப் புத்தாண்டு வழிவகுத்து, அனைவருக்கும் வாழ்வில் இறை உணா்வும், முன்னேற்றங்களும் பெறுக வேண்டுமென நம் ஆத்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜ பெருமான் திருவடி மலா்களை சிந்தித்து வாழ்த்துகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT