திமுக சொத்து பட்டியல் தொடர்பாக சிபிஐ-யில் புகார் அளிக்க உள்ளேன்: அண்ணாமலை
திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அடுத்த வாரம் சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அடுத்த வாரம் சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த வாரம் சிபிஐயிடம் புகார் அளிக்க உள்ளேன். சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.
திமுகவைச் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்பட போவதில்லை. நான் குற்றஞ்சாட்டிய நிறுவனங்கள் எதுவும் என்னுடையதல்ல என திமுகவைச் சார்ந்த எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம். 100 ஆண்டு வாழப் போவதில்லை இன்றோ, நாளையோ மரணம் தழுவுவது உறுதி, எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக அமைச்சா்கள், நிா்வாகிகளின் சொத்து, ஊழல் பட்டியல் ஏப். 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்தப் பட்டியலை அவர் நேற்று வெளியிட்டார்.