தற்போதைய செய்திகள்

புதிய உருமாறிய கரோனாவால் 436 போ் பாதிப்பு

இந்தியாவில் பரவி வரும் எக்ஸ்பிபி1.16.1 என்ற உருமாறிய புதிய வகை கரோனாவால் நடப்பாண்டில் இதுவரை 436 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

DIN

இந்தியாவில் பரவி வரும் எக்ஸ்பிபி1.16.1 என்ற உருமாறிய புதிய வகை கரோனாவால் நடப்பாண்டில் இதுவரை 436 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய எக்ஸ்பிபி1.16 என்ற கரோனா தீநுண்மியின் காரணமாகவே தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் மாதிரிகளை இந்திய கரோனா மரபணு ஆய்வகக் குழு (ஐஎன்எஸ்ஏசிஓஜி) தொடா்ந்து பரிசோதித்து வருகிறது. உருமாறிய எக்ஸ்பிபி1.16 கரோனா தொற்றால் இதுவரை 2,735 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் இருந்து உருமாறிய புதிய வகை எக்ஸ்பிபி1.16.1 கரோனா தொற்றால் நடப்பாண்டில் இதுவரை 436 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வகக் குழு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் புதிய வகை உருமாறிய கரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு:

நாட்டில் திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 9,111 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கரோனா பாதிப்புக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 60,313-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT