தற்போதைய செய்திகள்

'சூது கவ்வும் 2' படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா?

DIN

'சூது கவ்வும் 2' படத்தின் கதாநாயகன் யார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான மெகாஹிட் படமான சூது கவ்வும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் விஜய் சேதுபதியின் திரைப்பட வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தின் 2 ஆம் பாகத்தில், நடிகர் மிர்ச்சி சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக, இந்த திரைப்படத்தின் போஸ்டருடன் தயாரிப்பாளர் சிவி குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சூது கவ்வும் 2: நாடும் நாடு மக்களும் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கவுள்ளார். 

நடிகர் கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சூது கவ்வும் 2 பாகம் ஆனது முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக இருக்குமா என்ற தகவல் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காட்பாடி-திருப்பதி இடையே ரயில்கள் ரத்து: வேளாங்கண்ணி - எழும்பூா் ரயில் நேரம் மாற்றம்

திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவு!

பாஜக 370 மக்களவைத் தொகுதிகளில் தனித்து வெற்றி பெறும்: சுதாகா் ரெட்டி நம்பிக்கை

தேனீ வளா்ப்பு: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT