நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
தற்போதைய செய்திகள்

40% இளைஞர்களுக்கு மோடியைத் தெரியாது! ஆய்வில் தகவல்!

அமெரிக்காவில் 40 சதவிகித இளைஞர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை யார் எனத் தெரியாது என்றும், அவர் குறித்து எந்தவித தகவலையும் அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

DIN


அமெரிக்காவில் 40 சதவிகித இளைஞர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை யார் எனத் தெரியாது என்றும், அவர் குறித்து எந்தவித தகவலையும் அறிந்திருக்கவில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தி பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

அமெரிக்க இளைஞர்களிடையே உலகின் பிரபலமான 7 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த மார்ச் 20 முதல் 26 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவில் அதிக அளவாக உக்ரைன் அதிபர் வெலோதிமிர் ஸெலென்ஸ்கி குறித்து இளைஞர்கள் அறிந்துள்ளனர். 56 சதவிகித இளைஞர்களிடையே ஸெலென்ஸ்கி குறித்த நேர்மறையான கருத்துகள் பதிவாகியுள்ளன. 

அதேவேளையில் சீன அதிபர் ஸி ஜின்பிங் (8%), ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (7%) ஆகியோர் பட்டியலில் கடைசி இரு இடங்களைப் பெற்றுள்ளனர். உலக நடப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிர்மறையான நடவடிக்கைகளையே இவர்கள் எடுப்பதாகவும் ஆய்வில் கருத்துகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அதிகபட்சமாக 40 சதவிகித அமெரிக்க இளைஞர்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் உலக நடப்புகளுக்கு ஏற்றவாறு நேர்மறையான செயல்பாடுகளில் மோடி ஈடுபடுவதாக 1 சதவிகித அமெரிக்க இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஸி ஜின்பிங், புதினுக்கு ஆதரவாகவும் ஒரு சதவிகிதம் மட்டுமே நேர்மறையாக கருத்துகளை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வில் 56 சதவிகித நேர்மறை கருத்துகளுடன் முதலிடத்தில்  உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், 3வது இடத்தில் ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் உள்ளனர். 

இந்த ஆய்வில் எந்த தவலும் அறிந்திருக்கவில்லை என்ற பிரிவை இந்த ஆண்டு முதல்முறையாக பியூ ஆராய்ச்சி மையம் சேர்த்துள்ளது. இதில் மோடி குறித்து அதிகபட்சமாக 40 சதவிகித அமெரிக்க இளைஞர்கள் அறிந்திருக்கவில்லை. இப்பிரிவில் மோடிக்கு அடுத்தபடியாக 35 சதவிகிதத்தினர் ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸை அறிந்திருக்கவில்லை. 24 சதவிகித இளைஞர்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குறித்து அறிந்திருக்கவில்லை என ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT