தற்போதைய செய்திகள்

வேங்கைவயல் சம்பவம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவு

DIN

வேங்கைவயல் சம்பவத்தில் 11 பேரின் டிஎன்ஏவை  பரிசோதனை செய்ய புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீா் வழங்கும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிச. 26ஆம் தேதி தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றது. பின்னர் தமிழக அரசு தனி நீதிபதி சத்யமூர்த்தி தலைமையில் ஆணையம் ஒன்றையும் அமைத்தது.

சிபிசிஐடி காவல் துறையினர், 147 பேரிடம் நடத்திய விசாரணையில், இறுதியாக 11 பேர் மீது இறுதிக்கட்ட விசாரணை, நடத்தவுள்ளது. 11 பேரின் டிஎன்ஏவை  பரிசோதனை செய்ய  புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT