கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கர்நாடகம்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 2 பேர் மனு ஏற்பு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 

இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளரான மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கோலார் மற்றும் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் மனு அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT