கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பாஜக பிரமுகர் கொலை: திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

DIN


பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். 

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது நாள்தோறும் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. 

பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 

உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT