தற்போதைய செய்திகள்

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம்

மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அந்த கட்சியின் மூத்த நிர்வாகியும், அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதம்

DIN


சென்னை: மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அந்த கட்சியின் மூத்த நிர்வாகியும், அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதத்தில், மதிமுகவை தொடங்கியபோது, தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.

ஆனால், சமீபகாலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். 

மேலும், கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தரப்பவாத அரசியலும் தமிழ்நாடு மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது. இதனை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது.  

மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றாம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என வைகோவை கடுமையாக சாடும் வகையில் கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

வைகோவிற்கு ஏற்னவே எழுதியுள்ள கடிதங்களுக்கு ஏன் பதில் தரவில்லை என கேள்வி எழுப்பியுள்ள திரூப்பூர் துரைசாமி கடிதம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வைகோவின் மகன் துரை வைகோவிற்கு தலைமை கழகச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டபோது திருப்பூர் துரைசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்; திரளானோா் பங்கேற்பு

செங்கல் சூளைகள் புகைப்போக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

SCROLL FOR NEXT