மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 346 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 346 கன அடியாக உள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 334 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 346 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 101.49 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 101.39 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 66.65 டி.எம்.சியாக உள்ளது.