சென்னை: சென்னை கிண்டியில் தமிழ்நாடு அரசின் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும்2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் சார்பில் மருத்துவச் சுற்றுலாவுக்காக முதல்முறையாக தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் சவூதி அரேபியா, மொரீஷியஸ் உள்பட 20 நாடுகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. குறைந்த செலவில் தரமான மருத்துவச் சேவை வழங்கப்படுவதால் பல்வேறு வெளிநாடுகளின் சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு உள்ளது. இருப்பினும், இடைத்தரகர்களின் இடையூறுகளால் சிறந்த சேவையை பயனாளிகள் பெற முடியாத சூழல் நிலவுகிறது. அதனை தவிர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.