முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் ரூ.45 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5620-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960-க்கும் விற்பனையானது. 

இந்நிலையில், சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5630-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,040-க்கும் விற்பனையானது. 

அதேபோன்று வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ. 80.40-க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.80,400-க்கும் விற்பனையானகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →