தற்போதைய செய்திகள்

தங்கம் விலை எவ்வளவு குறைந்தது?

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

DIN

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,  புதன்கிழமை சென்னையில் ஒரு பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.78.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ.78,100-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT