முகப்பு
தற்போதைய செய்திகள்

'கல்கி 2898 ஏடி' முதல் பாடல் வெளியானது!

'கல்கி 2898 ஏடி' படத்தின் முதல் பாடலான ‘பைரவா’ பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 17 ஜூன், 2024 at 6:06 PM
பகிர்:
Updated On : 17 ஜூன், 2024 at 5:50 PM

'கல்கி 2898ஏடி' படத்தின் முதல் பாடலான ‘பைரவா’ பாடல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898ஏடி'.

பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' படத்தின் முதல் பாடலான ‘பைரவா’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் வரிகளை குமார் எழுதியுள்ளார். விஜய்நரேன் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.