ரத்னம் அப்டேட்!
நடிகர் விஷாலின் ரத்னம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
‘மார்க் ஆண்டனி’ படத்தைத் தொடர்ந்து விஷால் ஒப்பந்தமான படம் ரத்னம்.
இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
Advertisement
ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘டொண்ட் வோரி மச்சி’ பாடல் மார்ச் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.