இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
யூத்
கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் இன்று(ஏப். 16) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
சம்பவம் அத்தியாயம் ஒன்னு
மலையாள மொழித் திரைப்படமான சம்பவம் அத்தியாயம் ஒன்னு படத்தை ஜித்து சதீசன் மங்களத்து எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஸ்கர் அலி, வினீத் குமார், சித்தார்த் பரதன், செந்தில் கிருஷ்ணா, அசிம் ஜமால் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
உஸ்தாத் பகத்சிங்
இதனிடையே, இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் உஸ்தாத் பகத் சிங். மேலும், இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா, பார்திபன், ராவ் ரமேஷ், கே.எஸ். ரவிகுமார், கெளதமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பார்க்கலாம்.
போச்சம்மா
தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ள திரில்லர் இணையத் தொடர் போச்சம்மா.
இந்த இணையத் தொடரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நாளை(ஏப். 17) ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
மா இன்டி கதா
குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் மா இன்டி கதா.
இந்த இணையத் தொடரை ஈ டிவி வின் ஓடிடி தளத்தில் காணலாம்.
கடந்த வார ஓடிடி (தாய் கிழவி)
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
காக்கி சர்க்கஸ்
காவல் நிலையத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள புதிய இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். இந்த இணையத் தொடரில் நடிகர்கள் முனீஸ்காந்த் - சுபாஷ் செல்வம் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காக்கி சர்க்கஸ் இணையத் தொடரை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
கனிமங்கலம் கோவிலகம்
ராஜேஷ் மோகன் இயக்கத்தில் அஜ்மல் கான், அபி கிரிஷ், முகமது ரஃபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள மொழித் திரைப்படம் கனிமங்கலம் கோவிலகம்.
இந்தப் படம் திகில் சம்பவங்களை வைத்து நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டுள்ளது. கனிமங்கலம் கோவிலகம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
நாங்கள்
இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நாங்கள். மூன்று குழந்தைகளின் வாழ்க்கையையும், அவர்களுக்கும் தந்தைக்குமான உறவை மையப்படுத்தியும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஹால்
வீரா இயக்கத்தில் ஷேன் நிகம், சாக்ஷி வைத்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஹால். இந்தப் படம் நகைச்சுவை, காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஹால் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
You can see which movies and web series are releasing this week on OTT platforms.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.