அமித் ஷா 
தற்போதைய செய்திகள்

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

பிகாரில் சீதாமர்ஹி தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ’சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்’ என வாக்குறுதி அளித்துள்ளார்.

DIN

பிகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றான, சீதாமர்ஹியில் நடைபெற்ற பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ’சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்’ என வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, பிகாரின் சீதாமர்ஹியில் நடந்த பிரசாரத்தில் பாஜக அமைச்சர் அமித் ஷா உரையற்றினார். பிகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றான சீதாமர்ஹி, மே 20-இல் மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

பிரசாரத்தில் அமித் ஷா, "ராமர் கோயிலிலிருந்து தங்களை விலக்கி வைத்தவர்கள், இதைச் செய்ய முடியாது; ஆனால் அன்னை சீதையின் கோயிலைக் கட்ட முடிந்தால், அது நரேந்திர மோடியாலோ, பாஜகவாலோதான் முடியும்" என்று அமித் ஷா கூறினார்.

வாக்கு வங்கிக்கு பாஜக பயப்படவில்லை; பிரதமர் மோடி அயோத்தியில் ராமருக்காகக் கோவிலைக் கட்டினார், இப்போது, அன்னை சீதாவிற்காக, பெரிய நினைவுச்சின்னத்தைக் கட்டப்போகிறோம்” என்று கூறினார்.

"லாலு யாதவ், அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க, காங்கிரஸ் கட்சியின் பக்கம் அமர்ந்துள்ளார்" என்று அவர் கூறினார்.

மேலும், “பிகாருக்கு ’விகாஸ்ராஜ்(வளர்ச்சியளிப்பவர்) தான் தேவை; காட்டாட்சியல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலையழகு... சாரா கான்!

கலங்கடிக்கும் ஏ. ஆர். ரஹ்மான்... தேரே இஷ்க் மெய்ன் முதல் பாடல்!

நினைத்த தருணம்... நந்திதா ஸ்வேதா

மௌனத்தில் காதல்... ராஷ்மிகா மந்தனா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா!

SCROLL FOR NEXT