தற்போதைய செய்திகள்

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்படுவதற்கு முக்கியப் பங்காற்றிய நாராயணன் வாகுல் இன்று(மே 18), சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

DIN

தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்படுவதற்கு முக்கியப் பங்காற்றிய நாராயணன் வாகுல் இன்று(மே 18), சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், 1938-இல் ஒரு சிறுகிராமத்தில் பிறந்த வாகுல், பள்ளிப்படிப்பினை சென்னையில் ராமகிருஷ்ணா பள்ளியிலும், கல்லூரிப் படிப்பினை சென்னை லயோலா கல்லூரியிலும் படித்தார்.

1950-களில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். தனது 44ஆவது வயதில் இந்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ஐசிஐசிஐ வங்கியானது தொடங்கப்பட்டபோது, அந்த வங்கியின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் வாய்ப்பினை வாகுல் அடைந்தார். 1996-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற வாகுல், 2009-ஆம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியின் செயல்சாரா இயக்குநராக இருந்தார்.

வங்கித்துறையில் இவரது சேவையைப் பாராட்டும் விதமாக 2010ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களாக உடல்நலமற்று இருந்தார் வாகுல். உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனின்றி தனது 88-ஆவது வயதில் மறைந்து விட்டார் என்று தெரிகிறது. வாகுல் அவர்களின் மறைவினையொட்டி, பலரும் வருத்தங்களும் இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT