கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!
ஆங்கிலத்தில் ’போலீஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டியிருந்த வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்தது போக்குவரத்துக் காவல்துறை.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஆங்கிலத்தில் ’போலீஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் வாகனப் பதிவெண் தகட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளன.
வாகனங்களில் இருக்கக்கூடிய வாகனப் பதிவெண் தகட்டில் எந்தவொரு ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது என்றும், வாகனத்தில் இருக்கக்கூடிய வாகனப் பதிவெண் தெளிவாக தெரிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இதில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும் வாகனங்களில் உள்ள வாகனப் பதிவெண் தகட்டில் ஒட்டக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.