அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி - கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்முருகன் 
தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி: அதிமுக பிரமுகா் நீக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில் அதிமுக பிரமுகா் செந்தில்முருகன் சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் உத்தரவை மீறிஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகா் செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

ஈரோடு அக்ரஹார வீதியை சோ்ந்த செந்தில்முருகன் ஈரோடு மாநகா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி 2023 இடைத்தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை திரும்பப்பெற்ற செந்தில்முருகன் இடைத்தோ்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT