முக்கியச் செய்திகள்

ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாட ரூ1.25 கோடி சம்பளம் வாங்கிய நடிகை!

சரோஜினி

‘இது தான்டா போலீஸ்’ ராஜசேகரை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய தெலுங்கு திரைப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். அந்தப் பாடலுக்கு தயாரிப்பாளர்கள் சன்னிக்கு தரவிருக்கும் சம்பளம் தான் 1.25 கோடி ரூபாய்கள். ஒரு ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாட இப்படி அடேங்கப்பா! என வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் தர முன் வந்ததற்கு சன்னி லியோனுக்கு அங்கத்திய ரசிகர்களிடம் இருக்கும் பிரமாண்டமான வரவேற்பே காரணம் எனப் படக்குழுவினர் கூறுகின்றனர். 

அந்தப் படத்தில் ராஜசேகர் ஹீரோ, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார் ஹீரோயின். படத்தின் பெயர் கருட வேகா 126.18M. இத்திரைப்படத்தில் ராஜசேகர் தேசிய புலனாய்வுக் காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். ராஜசேகர் என்றாலே அது முற்றிலும் ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் சரி. இந்தத் திரைப்படமும் முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படமாகவே ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை மும்பையில் அருமையான கிராமத்துப் பின்னணி செட் அமைத்து பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். படத்தில் ஒரே ஒரு ஐட்டம் நம்பர் பாடலுக்காக ஏன் இத்தனை செலவு செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு; தயாரிப்பாளர்களிடமிருந்து எந்த வித தயக்கமும் இல்லாமல் வரும் பதில், அந்தப் பாடலை ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். கொடுத்த சம்பளம் தகும் என்கிறார்களாம். அக்கட பூமி மட்டுமல்ல தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சன்னி லியோன் பெயரைச் சொன்னாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் தயாரிப்பாளர்களுக்கு இத்தனை அதிக சம்பளம் என்பது பெரிய விசயமாகத் தெரியவில்லை போலும்!

எது எப்படியோ சம்பளம் தகுமா? இல்லையா? என்பது படமும், பாடலும் வெளிவந்தால் தெரிந்து விடப் போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT