முக்கியச் செய்திகள்

‘தண்ணி அடிக்கையில்’ மிக்ஸிங்குக்கு எனர்ஜி ட்ரிங்க்ஸ் பயன்படுத்துவோர் கவனத்துக்கு!

KV

தமிழ்நாட்டில் தண்ணி அடிக்க மிக்ஸிங்குக்கு கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட், செவன் அப், ஃபேண்டா, மிரிண்டா, சோடா இத்யாதி, இத்யாதி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள சர்வே முடிவுகள் எதுவும் தேவையில்லை. நாள்தோறும் வாட்ஸப், ஃபேஸ்புக்கில் ஒரு முறை நுழைந்து வெளிவந்தாலே போதும். அன்பான குடிமகன்கள்/ குடிமகள்கள் பாரபட்சமின்றி எதையோ சாதித்த உணர்வில் தங்களது மிக்ஸிங் மகாத்மியத்தையும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய மறப்பதில்லை. ஆதலால் மேற்கண்ட வஸ்துக்கள் தான் ஹாட் எடுக்கும் போது கலக்கப் படுகின்றன என்று தெரியவருகிறது. 

மிக்ஸிங் ஏன்?

மிக்ஸிங் இல்லாமல் ராவாகக் குடித்தால் ஆல்கஹாலின் தீவிரத் தன்மை உணவுக் குழாய், இரைப்பை, தொண்டைப் பகுதி, கல்லீரலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் தான் குடிப்பவர்கள் தங்களது ஹாட் ட்ரிங்குகளுடன் மேற்சொன்ன எனர்ஜி ட்ரிங் அல்லது கூல் ட்ரிங்குகளை கலந்து அருந்துகிறார்கள். ஆனால் என்ன காரணத்துக்காக மிக்ஸிங் செய்கிறார்களோ அந்தக் காரணமே அனர்த்தமாகி விட்டால் என்ன செய்வது? பேசாமல் இனி ஹாட் எடுக்கும் போது மிக்ஸ் செய்யாமல் குடித்து விடலாம் என்று முடிவு கட்டி விடாதீர்கள் அது அதை விட மோசமான பின் விளைவுகளைத் தரும் என்பது உங்களுக்கே தெரியும். நீரடித்து நீர் விலகுமா? அதனால் ஆல்கஹாலுடன் தண்ணீரை மிக்ஸிங் செய்து குடிப்பதே உத்தமம். 

எனர்ஜி ட்ரிங்குகளை ஏன் மிக்ஸிங் செய்யக் கூடாது?

கார்போனேட்டட் எனர்ஜி ட்ரிங்குகளில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரையும், கஃபீன் எனும் மூலப்பொருளும் குடிப்பவர்களது மூளையை மழுங்க்ச் செய்து மேலும், மேலும் மிக்ஸிங் செய்து குடிக்க வேண்டும் என்ற் உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம். அதோடு மட்டுமல்ல உயர் ரத்த அழுத்தம், படபடப்பு, விரைவான இதயத் துடிப்பு, வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகளும் அவற்றுக்கு உண்டாம். ஆல்கஹாலின் கெட்ட தன்மையை குறைக்கவே மிக்ஸிங் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் இப்படி ஒரு ஆபத்து மறைந்திருப்பது யாருக்குத் தெரியும். சமீபத்தில் கனடாவில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழக மது போதை ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் குழு ஒன்று இந்த உண்மையக் கண்டறிந்து வெளியிட்டது. அதனடைப்படையில் உலக நாடுகள் சிலவற்றில் அந்தந்த நாடுகளின் பார்களில் விற்கப்படும் எனர்ஜி ட்ரிங்குகள் தடை செய்யப்பட்டுள்ளனவாம்.

'கஃபீன்' எனும் மூலப்பொருள் ஆல்கஹாலின் மயக்கமூட்டும் தன்மையக் குறைப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் கஃபீன் அதை மட்டுமே செய்வதில்லை மிக்ஸிங் வழியாக குடிப்பவர்களது உடலுக்குள் புகுந்து ரத்த நாளங்களை அதிகப் படியாக விழிப்படையச் செய்து உணர்ச்சிவசப்பட்டு பார்களில் சண்டை சச்சரவுகளை நிகழ்த்தத் தூண்டும் அளவுக்கு இது மிக மோசமான கெடுதலை ஏற்படுத்த வல்லதாம். 

எனர்ஜி ட்ரிங்குகளில் கலந்துள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் கஃபீன் இரண்டுமே ஆல்கஹாலின் மயக்கமூட்டும் தன்மையைக் குறைக்குமென்றாலும் கூடவே குடிப்பவர்களது உடல் நலத்தோடு சேர்த்து மூளையையும் நாசப்படுத்தும் அளவுக்கு மோசமான தன்மைகள் கொண்டது என்பதை கிட்டத்தட்ட 13 ஆய்வறிக்கைகள் மூலம் நிபுணர்கள் குழு மெய்பித்துள்ளது. 13 ல் 10 ஆய்வறிக்கைகள் மிக உறுதியாக மேற்கண்ட எனர்ஜி ட்ரிங்குகளை தடை செய்யக் கூறுகிறதாம்.

சொல்ல வேண்டியதைச் சொல்லியாகி விட்டது. அப்புறமும் இல்லை...இல்லை நாங்கள் பாரம்பரிய முறைப்படி இனிமேலும் விஸ்கியில் கூல் ட்ரிங் கலந்து தான் குடிப்போம் என்று பாட்டிலை உடைத்து சத்தியம் செய்வீர்களானால் ரிஸ்க் உங்கள் சாய்ஸ் குடிமக்களே!

கொசுறுத் தகவல்:

குடிமகன்கள் கவனத்துக்கு... 

இதையும் மறக்காம படிச்சு பொது அறிவை வளர்த்துக்குங்க...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT