முகப்பு
சிறப்புச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அம்சங்கள்!

2019 - 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

Updated On : 22 ஜூலை, 2025 at 11:18 AM
பகிர்:
Updated On : 5 ஜூலை, 2019 at 7:22 AM

2019 - 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் இங்கே.. தினமணி.காம் உடன் இணைந்திருங்கள்!
 

Updated On : 5 ஜூலை, 2019 at 7:22 AM

 ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2% ஆக இருக்கும்.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 7:20 AM

 குறைந்த விலையில் வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்.

15 ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 7:18 AM

 பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 7:15 AM

நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

 
5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது, 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
 
5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
 
கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
 
நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும். நாட்டில் உள்ள 99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன என்று தெரிவித்தார்.
 
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படுகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 7:13 AM

 நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும்.

நாட்டில் உள்ள 99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன.
Updated On : 5 ஜூலை, 2019 at 7:12 AM

 கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

Updated On : 5 ஜூலை, 2019 at 7:11 AM

 மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

Updated On : 5 ஜூலை, 2019 at 7:09 AM

 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது.  நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

 
5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 7:07 AM


5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது.

Updated On : 5 ஜூலை, 2019 at 6:59 AM

 இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது.

ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதில் இருக்கும் சிக்கல்களைக் களைய முன்னுரிமை.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:57 AM

 பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.

Updated On : 5 ஜூலை, 2019 at 6:57 AM

 பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆக நீடிக்கும்.

Updated On : 5 ஜூலை, 2019 at 6:55 AM

 புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்நிலையங்களை நவீனப்படுத்தும் பிரத்யேக திட்டம் அடுத்த ஆண்டு துவக்கி வைக்கப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:54 AM
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி அரசு முதலீடு செய்யும்.
 
பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:46 AM

 வங்கிகளில் வாராக் கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடன் வளர்ச்சி 13.8 சதவீதம் வளர்ந்துள்ளது.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:45 AM
நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அந்த வகையில் உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:44 AM

 இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும்.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:41 AM

 எல்இடி பல்புகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.341 கோடி அளவுக்கு மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:39 AM
சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.
 
35 கோடி எல்இடி பல்புகளை வழங்கியதால் ரூ.18,341 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:36 AM

கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும்.

இந்தியா விரைவில் உயர்கல்வி மையமாக மாறும்.

வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தியாவில் படியுங்கள் திட்டம் முன்னெடுக்கப்படும்.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:33 AM

இந்தியாவின் கல்வித் தரம் 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது: பட்ஜெட்டில் தகவல்

 

புது தில்லி: இந்தியாவின் கல்வித் தரம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை.

தற்போது இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.

சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை உருவாக்கப்படும்.

உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.

விளையாடு இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும். 

இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 

புதிதாக உருவாகும் தொழில் நிறுவனங்களுக்கு என்று பிரத்யேகமாக தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:30 AM

 தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.


சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை உருவாக்கப்படும்.

உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.

விளையாடு இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும். 

இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:29 AM

 உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை. தற்போது இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:24 AM

 2024ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யப்படும்.

 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:22 AM

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்றி கூறிய நிர்மலா சீதாராமன்


 
உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்குக் காரணமான விவசாயிகளுக்கு நன்றி.

வேளாண் துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள். விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:18 AM

 குடிநீர் பிரச்னை இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து இந்தியர்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.


வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ஹர் கர் ஜல் (ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்) திட்டம் செயல்படுத்தப்படும்.

நீர் மேலாண்மையை சரி செய்ய நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல இயக்கங்கள் நடத்தப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:06 AM

 2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்பிஜி கேஸ் இணைப்புப் பெற்றிருக்கும்.


5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்

2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே இல்லை என்கிற நிலை ஏற்படும்.

2022ம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினரும் சொந்தமாக வீடு பெற்றிருப்பார்கள்.

நாடு முழுவதும் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:06 AM

 மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும். 

 
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி முதலீடு.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:03 AM

 மேலும் 300 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும், இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் அனைவரும் வசதியான வகையில் வீடுகளில் வசிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா விண்வெளித் துறையில் மிகப் பெரிய சக்தியாக உருவாகியுள்ளது.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 6:02 AM

அன்னிய முதலீடு

காப்பீட்டுத் துறையில் இடைநிலை அமைப்புகளுக்கு 100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
 
சில்லறை மற்றும் வணிகம், விமானத் துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
 
ஊடகம், விமானத் துறைகளில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 5:52 AM
ஒரு நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டு வரப்படும்

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நடவடிக்கை.

நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.

அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம்.
 
Updated On : 5 ஜூலை, 2019 at 5:48 AM

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் 657 கிலோ மீட்டர் அளவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  •  
  • உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் குறைந்த விலையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  •  
  • சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
  •  
  • Updated On : 4 ஜூலை, 2019 at 7:36 PM


    மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

    Updated On : 4 ஜூலை, 2019 at 7:32 PM

     தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12% ஆக உயர்வு.

    Updated On : 4 ஜூலை, 2019 at 7:31 PM

     பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பு

    Updated On : 4 ஜூலை, 2019 at 7:31 PM

     ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ்.

     
    முழு கட்டுரையைப் படிக்க →