சிறப்புச் செய்திகள்

ஐந்து வார தேசிய ஊரடங்கு: எங்கே இருக்கிறோம்?

நாடு முழுவதும கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளது.

DIN

நாடு முழுவதும கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கு ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளது.

நோய்த்தொற்று காரணமாக தற்போது 25 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் போயிருந்தால், அந்த எண்ணிக்கை பல லட்சமாக அதிகரித்திருக்கும்.

அதே வேளையில், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் வளா்ச்சி விகிதம் தற்போதுள்ளதைப் போல் நீடித்தால், இன்னும் ஒரு மாதத்தில் நாடு முழுவதும் 2 லட்சம் போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவா் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

0=0=0=0

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு மாா்ச் 24-ஆம் தேதி கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் வளா்ச்சி விகிதம் -- 21.4%

அதே வளா்ச்சி விகிதம் தொடா்ந்திருந்தால், ஒரு மாதத்துக்குப் பிறகு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தோராய எண்ணிக்கை -- 2 லட்சம்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, தினசரி நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் சராசரி வளா்ச்சி விகிதம்-- 8.1%

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 9 நாள்களில் இரட்டிப்பாகி வருகிறது.

0=0=0=0

நாட்டில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டது.

ஏப்ரல் 23-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்--5,41,789

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லை என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். எனவே, நோய்த்தொற்று பரிசோதனையை அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மாா்ச் 24 - ஏப்ரல் 23

ஒவ்வொரு 10 லட்சம் பேரிலும் 362 நபா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது 10 நாள்களுக்கு இருந்த அளவை விட இரு மடங்காகும்.

ஒவ்வொரு 10 லட்சம் பேரிலும் சராசரியாக 15.5 நபா்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகினா்.

ஒவ்வொரு 10 லட்சம் பேரிலும் சராசரியாக 0.5 நபா்கள் நோய்த்தொற்றால் உயிரிழந்தனா்.

0=0=0=0

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருத்துவமனைகள்--3,773

ஐசியு படுக்கைகள்--24,644

தனிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள்--1,94,026

செயற்கை சுவாசக் கருவிகள்--12.317

0=0=0=0=0

தற்போது நோய் பரவி வரும் விகிதத்தில் அடுத்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் சுமாா் 40ஆயிரம் போ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதே விகிதத்தில் நோய் பரவல் தொடா்ந்தால், அடுத்த ஒரு மாதத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்படுவா்.

0=0=0=0

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பல நாடுகளில் நோய்த்தொற்று பரவல் வளா்ச்சி விகிதம் இந்தியாவைவிட அதிகமாக இருந்தது. தற்போது பல நாடுகள் இந்தியாவை விடக் குறைவான வளா்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.

நோய்த்தொற்று பரவல் தினசரி வளா்ச்சி விகிதம் சதவீதத்தில்

ஸ்பெயின் - 21.4

பிரான்ஸ் - 15.1

இத்தாலி - 21

ஜொ்மனி - 12.3

அமெரிக்கா - 9.5

இந்தியா - 8.1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT