வாக்குத் திருட்டு குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்தபோது... PTI
சிறப்புச் செய்திகள்

வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டைத் தொடர்ந்து வெளிவரும் வாக்காளர் பட்டியல் அதியசங்களின் வரிசை...

இணையதளச் செய்திப் பிரிவு

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலை எடுத்து, பல்வேறு ‘அதிசயங்களைப்’ அவர் பட்டியலிட்டார். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

தொடர்ந்து, தற்போது தேர்தல் ஆணையத்தின் உபயமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிறைய வாக்காளர் பட்டியல் அதிசயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தொடரும் அதிசயங்கள்:

57 வயது அப்பாவுக்கு 72 வயது மகன்

பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் 57 வயதான ராஜ்கமல்தாஸ் என்ற அப்பாவுக்கு 72 வயதான மகன்!

ராஜ்கமல்தாஸுக்கு மொத்தம் 50 குழந்தைகள். இளையவருக்கு வயது 28, இவர்களில் மூத்தவருக்கு வயது 72.

எல்லாரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பது கூடுதல் அதிசயம்!

125 வயது சாதனை!

வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள மின்டா தேவி என்ற பெண்ணுக்கு வயது 125! பிறந்த தேதி 15.7.1900. பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

'ஆறு’முகம்!

மகாராஷ்டிரத்திலுள்ள பல்ஹர் மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலில் சுஷாமா குப்தாவின் விவரங்கள், ஆறு இடங்களில் வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களுடன்!

மூன்று வாக்காளர் அட்டை!

கர்நாடகத்தைச் சேர்ந்த ஷகுன் ராணி என்ற 72 வயது பெண்ணுக்கு ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் மூன்று வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளர் அட்டை உள்ளது.

முகவரி ’பூஜ்ஜியம்’

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான வீடுகளின் முகவரி 0, - , # எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

SCROLL FOR NEXT