கோடைக்காலம் Center-Center-Delhi
சிறப்புச் செய்திகள்

வரப்போகும் கோடைக்காலம் எப்படி இருக்கும்? அச்சுறுத்தும் முன்கணிப்பு!

சுடச்சுட கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

குளுகுளு என்று இருந்த குளிர்காலம் முடிந்து, சுடச்சுட கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குளிர்காலத்தில் என்னா பனி என்று புலம்பிய மக்கள், இனி அதை நிறுத்திவிட்டு, வியர்வை மழையில் நனைய வேண்டிய நாள்கள் வந்துவிட்டன. வரப்போகும் கோடைக்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கியிருக்கிறது.

மிகவும் சரி... வானிலை ஆய்வு மையம் என்ன கோடை வெப்பம் வாட்டாது என்று சொல்லியிருக்கவா போகிறது. நிச்சயம் இல்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது போல, வரும் கோடைக்காலத்தில் வெப்பமானது இயல்பான அளவை விட அதிகமாகவே இருக்கும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும், வெப்ப அலை வீசும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மாதங்கள் எப்படி இருக்கும் என்பதைவிடவும் கடந்த பிப்ரவரி மாதம்தான், 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக வெப்பமான மாதமாக இருந்துள்ளது. அதாவது வழக்கமாக இருக்க வேண்டிய வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸ். ஆனால், கடந்த பிப்ரவரியில் பதிவானது 22.04 டிகிரி செல்சியஸ். இந்த பிப்ரவரி மாதம்தான், 1901க்குப் பிறகு அதிக வெப்பமும், அதிகக் குளிரும் பதிவான மாதமாக உள்ளது.

மற்றொரு துயரம் என்னவென்றால், கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி வரையில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவும் குறைந்திருந்ததுதான். 59 சதவீதம் மழை பற்றாக்குறையாக இருந்துள்ளது.

வழக்கமாக கோடை வெப்பம் தொடங்குவது மார்ச் மத்தியில் என்றாலும், இந்த ஆண்டு பிப்ரவரி முதலே பகல் நேர வெப்பம் வாட்டத் தொடங்கிவிட்டது. இதனுடன் மேற்குக் கடற்கரையின் வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு வானிலை அறிக்கை வெளியாகியிருந்தது.

குறைவான மழைப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோடைக்காலம் மிக விரைவாகத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. அதுபோல, மிக வறண்ட குளிர்காலத்தை கடந்து வந்திருக்கிறோம்.

அடுத்து வரும் மாதங்கள்..

நாட்டின் பெரும்பாலான பகுதிகள், தென் பகுதியைத் தவிர்த்து, இயல்பான அளவை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

மேலும், மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை வீசும் நாள்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

SCROLL FOR NEXT