தற்போதைய செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்தனர்!

DIN

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் தெரிந்ததும், அதிமுக தொண்டர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

செப்டம்பர் 22-ம் தேதி அன்று உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. முதலில் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்னை இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வந்து அவருக்கு சிறப்புச் சிகிச்சைகள் அளித்தனர்.

தீவிர கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சைகள் காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவரை தனி வார்டுக்கும் பிறகு அவரை சாதாரண வார்டுக்கும் மாற்றம் செய்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக ஆளுநர் உள்பட, பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

வெகு விரைவில் முதல்வர் வீடு திரும்பலாம் என்றும், அதை ஜெயலலிதாவே முடிவு செய்வார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் பரவியதும் அதிமுக தொண்டர்கள் மிகுந்த கவலையுடன் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கண்ணீருடன் முதல்வர் நலம் பெற வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT