உலகின் பல நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் ஹஜ்ஜூக்காகப் புனித மெக்கா சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்களில் ஒன்றரை லட்சம் பேர் மெக்கா நகரை சென்றடைந்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் மெக்காவில் ஏற்பட்ட விபத்து போல் ஏதும் இந்த ஆண்டு நிகழாமல் இருக்க சவுதி அரசு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள வசதியாக புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. புனித மெக்காவில் மட்டும் 800க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புனிதப் பயணிகள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்வரை அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படமாட்டாது என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் அஹ்மதி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.