தற்போதைய செய்திகள்

பனவடலிசத்திரம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

பனவடலிசத்திரம் அருகே சொத்து தகராறு தொடர்பாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

எம். ஈஸ்வரமூர்த்தி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலி சத்திரத்தில் சொத்து தகராறு  காரணமாக  விவசாயி ஒருவரை  அரிவாளால் வெட்டியுள்ளனர். 

பனவடலிசத்திரம் அருகே திருமலாபுரத்தைச் சேர்ந்த நல்லகண்ணு மகன்கள் ராமசாமிப் பாண்டியன், லட்சுமணப் பாண்டியன். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாம். இது தொடர்பாக ஊர் தலைவர்கள் சமரசம் செய்து வைத்தும் பிரச்சினை தீரவில்லையாம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சொத்து தொடர்பாக ராமசாமிப் பாண்டியன் வீட்டிற்கு, லெட்சுமணப் பாண்டியன் தன் மகன் பாண்டியராஜனை அழைத்துக் கொண்டு கேட்டாராம். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம். இதில் லட்சுமணப் பாண்டியனுக்கு அரிவாளால் வெட்டு விழந்தது. இதேபோல் ராமசாமிப் பாண்டியனுக்கும் காயம் ஏற்பட்டதாம்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ராமசாமிப் பாண்டியன், அவரது மனைவி சண்முகத்தாய், லட்சுமணப் பாண்டியன், அவரது மகன் பாண்டியராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT