கூடலூர் கோக்கால்மலை, லாரஸ்டன் பகுதியில் குட்டிகளுடன் சுற்றித் திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர் வனச் சரகத்திலுள்ள மேல்கூடலூர், கோக்கால்மலை, லாரஸ்டன் ஆகிய குடியிருப்பு பகுதிகளையொட்டியுள்ள புதர்களில் குட்டிகளுடன் கரடி ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது.
பொதுவாகவே யானை, சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம் காணப்படுவதால் அதற்கு தகுந்தவாறு பொதுமக்கள் வெளியிடங்களுக்கு திட்டமிட்டு வந்து செல்கின்றனர். இந்நிலையில், தற்போது கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களிடையே அச்சம் அதிகமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.