தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரம்: கர்நாடக சட்டப் பேரவையில் இன்று  அவசர சிறப்புக்கூட்டம் 

உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து விவாதிக்க கர்நாடக சட்டப் பேரவையில் இன்று  அவசர சிறப்புக்கூட்டம் கூடுகிறது

கவிதைமணி

கர்நாடகா

உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து விவாதிக்க கர்நாடக சட்டப் பேரவையில் இன்று  அவசர சிறப்புக்கூட்டம் கூடுகிறது. 

தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் வரை காவிரியில் தினமும் 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். இது குறித்து விவாதிக்க முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. 

இதில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சட்டமன்றத்தை கூட்டி விவாதிப்பது என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கர்நாடக சட்டமன்றத்தின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது.

இதனிடையே நேற்று டெல்லி சென்ற சித்தராமைய்யா, காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சித்தராமைய்யாவிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் உமாபாரதியை அவர் சந்தித்து பேசினார்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சித்தராமைய்யா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT