தற்போதைய செய்திகள்

சென்னையின் மாபெரும் மருத்துவ கண்காட்சி - ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் எக்ஸ்போ

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை (Apollo Personalised Health Chek)  இணைந்து நடத்தும் ‘ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் எக்ஸ்போ’ மருத்துவக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 26 & 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். 

இலவச மருத்துவப் பரிசோதனைகள், முன்னணி மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், கண் பரிசோதனை, VLCC வழங்கும் Body Composition Analysis, விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை, அங்குபஞ்சர்  -அக்குபிரஷர் சிகிச்சை மற்றும் ஆட்டிசம் குறித்த ஆலோசனைகள் இக்கண்காட்சியில் வழங்கப்படும். தவிர பல்வேறு அரங்குகளில் சித்த மருத்துவ மூலப்பொருள் கண்காட்சி, பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகள் கண்காட்சி, Terrace Gardening குறித்த ஆலோசனைகள் போன்றவையும் நடைபெற உள்ளன. இந்த மருத்துவ கண்காட்சி வெற்றிகரமாக நான்காவது முறை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BMD பரிசோதனை (Bone Mineral Density), மார்பக-கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, லேசர் முறையில் முடி அகற்றுதல், முடி மற்றும் தோல் பரிசோதனை, வர்ம சிகிச்சை மற்றும் நாடி பார்த்தல், பூட் கேம்ப் சேலஞ்ச் (Boot Camp Challenge) 5 Members per team, இளமை காக்கும் யோகா – செய்முறை விளக்கம், பேலியோ டயட் கவுன்சிலிங், ஜும்பா நடனம் (Zumba Dance) போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

இக்கண்காட்சியில் ஆரோக்கியம் & நல்வாழ்வு வழங்கும் 'சென்னை பேலியோ சந்திப்பு' நடைபெற உள்ளது. பேலியோ டயட் குறித்த அனைத்து சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம். 

அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு – 9282438120 / 9789667626 / 9282441749

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT