தற்போதைய செய்திகள்

ஆசான் கல்லூரியில் தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டம்

DIN
சுவாமி விவேகானந்தரின் 154-ஆவது பிறந்த தினத்தையொட்டி,  சென்னையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (ஜன.12) நடைபெற்றன.
விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவை ஆசான் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்தினர்.
விழாவை முன்னிட்டு ஏற்கெனவே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.ராமநாதன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரியும், தமிழ் துறைத் தலைவருமான பொன்.ரமேஷ் குமார், நிகழ்ச்சிக்கு நன்றி உரை வழங்கினார்.
விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT