முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி கோவில் யானை கஸ்தூரி குளிக்க புதிய நீச்சல் குளம்!

பழனி முருகன் கோவில் யானையின் பெயர் கஸ்துாரி. இந்த யானை குளிப்பதற்கு தற்போது

Updated On : 8 அக்டோபர், 2017 at 5:40 PM
பகிர்:

பழனி முருகன் கோவில் யானையின் பெயர் கஸ்துாரி. இந்த யானை குளிப்பதற்கு தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதிய நீச்சல் குளமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கஸ்தூரிக்கு 48 வயதாகிறது. எட்டு வயது முதல் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட கோவிலின் முக்கிய விழாக்களில் பங்கேற்று வரும் கஸ்தூரியை பக்தர்களால் நேசிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கஸ்தூரி குளிப்பதற்காக கோவில் வளாகத்திலேயே ஒரு 'ஷவர் பாத்' போன்ற அமைப்பு உள்ளது. தற்போது இந்த யானை குளிப்பதற்காக காரமடை தோட்டத்தில், இயற்கையான சூழ்நிலையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. யானை நன்றாக முங்கி குளிக்க வசதியாக இந்தப் புதிய நீச்சல் குளம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Advertisement

இந்த நீச்சல்குளப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் கஸ்தூரியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.