தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவுடன் யாரிந்த இரட்டைக் குழந்தைகள்? வைரலாகும் புகைப்படம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

DIN


  
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று பிறந்தனர். 

குழந்தைகள் பிறந்த அன்று மருத்துவமனைக்கே சென்று அங்குள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று, கிருஷ்ணபிரியா தன் குழந்தைகளின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து ‘அன்று என் கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்த நாளும் இன்றே... மறக்க இயலாத பல நினைவுகளைத் தன்னுள் அடக்கிய தினம் இத்தினம்’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். 

ஜெயலலிதா கிருஷணப்பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது, வளையல் அணிவிக்கும் புகைப்படம், இரட்டைக் குழந்தைகளுடனான புகைப்படம் ஆகியவை வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT