அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது! நடிகை ஸ்ரீதேவிக்கு டிடிவி ட்விட்டரில் இரங்கல்!
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து டிடிவி. தினகரன் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'இந்திய திரையுலகின் 'லேடி சூப்பர்ஸ்டார்' ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, ஒரு குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமாகி தனது அபரிதமான திறமையால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி திரைப்படத் துறையிலும் முடி சூடா ராணியாக வெற்றிக் கொடி
நாட்டியவர்
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.